கார் விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள் - ரசிகர்கள் சோகம்
படப்பிடிப்பிற்கு காரில் சென்ற போது பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல சீரியலான பாக்கியலட்சுமி ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இதன் நாயகன் கோபி குடும்பத்திற்காக மனைவியை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறான். அந்த சமயத்தில் கோபியை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது.
இதற்காக கோபி செய்யும் தகிடு தத்தங்கள், ஒரு பக்கம் பாக்யாவை எப்படி விவாகரத்து செய்வது என யோசனை என ரசிகர்களை நாளுக்கு நாள் எதிர்பார்ப்பில் எகிற வைக்கிறது.இந்த சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் பாக்யாவின் அன்பு மருமகளாக நடித்து வரும் திவ்யா கணேஷ், பாக்யா வீட்டில் வேலை செய்யும் கலகலப்பான செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் கம்பம் மீனா இருவரும் ஒன்றாக சுற்றி வருவது வழக்கம்.
இவர்கள் இருவரும் நடிகை ஷகீலாவின் வளர்ப்பு மகளான மிலாவோடு குமுளியில் நடக்கும் ஒரு படப்பிடிப்பிற்காக காரில் சென்றுள்ளனர். அப்போது எதிர்ப்பாராத விதமாக திருச்சி பக்கத்தில் அவர்களது காருக்கு பின்னால் வந்த மற்றொரு கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மிலாவுக்கு மட்டும் முதுகில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.