Tuesday, Apr 8, 2025

“ஏன் எது பண்ணாலும் திட்டுறீங்க..என் வேலையை தான் நான் செய்றேன்” - பாக்கியலட்சுமி கோபி வேதனை

Baakiyalakshmi
By Swetha Subash 3 years ago
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இதன் நாயகன் கோபி குடும்பத்திற்காக மனைவியை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறான்.

அந்த சமயத்தில் கோபியை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் தகிடு தத்தங்கள் என திரைக்கதை சுவாரஸ்யமாக செல்கிறது.

“ஏன் எது பண்ணாலும் திட்டுறீங்க..என் வேலையை தான் நான் செய்றேன்” - பாக்கியலட்சுமி கோபி வேதனை | Baakiyalakshmi Lead Kopi Instagram Post Fans Yell

பாக்கியாவிடமும், குடும்பத்தினரிடமும் கோபி சிக்கிக்கொள்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ஒவ்வொரு சூழலிலும் ஏதாவது ஒன்றை செய்து அவர் தப்பிப்பது ரசிகர்கள் மத்தியில் கோபி மீது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாக்கியலட்சுமி தொடரின் நாயகன் கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கதத்தில், “இதற்கு முன்னால் வேறு ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருந்தேன். அதில், பயங்கரமாக திட்டி அனுப்பியிருந்தனர். இதனால் புதிதாக பயன்படுத்தி வரும் இந்த இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிலும் திட்டி அனுப்புகின்றனர்.

“ஏன் எது பண்ணாலும் திட்டுறீங்க..என் வேலையை தான் நான் செய்றேன்” - பாக்கியலட்சுமி கோபி வேதனை | Baakiyalakshmi Lead Kopi Instagram Post Fans Yell

ஒரு நடிகராக, சதீஷாக எனக்கு ஒன்று புரியவில்லை. நன்றாக நடித்தாலும் திட்டுகிறீர்கள். நன்றாக நடிக்காவிட்டாலும் திட்டுகிறீர்கள். கோபியாக நடித்தாலும் தப்பு. சத்தியமாக புரியவில்லை.

ஏதோ கொடுத்த வேலையை ஒழுங்காக செய்கிறேன் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதை எல்லாம் ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றுகூட தெரியவில்லை.” என வேதனையுடன் பேசி பதிவிட்டுள்ளார்.