ராதிகாவிடம் மாட்டப்போகும் கோபி...பாக்கியலட்சுமி சீரியலில் நிகழப்போகும் ட்விஸ்ட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இதன் நாயகன் கோபி குடும்பத்திற்காக மனைவியை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறான். அந்த சமயத்தில் கோபியை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் தகிடு தத்தங்கள் என திரைக்கதை சுவாரஸ்யமாக செல்கிறது.
இதனிடையே கோபி வீட்டில் நடக்கவிருக்கும் ராமமூர்த்தி தாத்தா பிறந்த நாள் விழாவில் அவர் மாட்ட வேண்டும் என ரசிகர்கள் நினைக்கின்றனர். காரணம் இந்த நிகழ்ச்சிக்கு ராதிகா வருகை தருவது போல ஒளிபரப்பாகிறது.
ஏற்கனவே பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம் எபிசோடு ஒளிபரப்பாகி வருவதால் அதில் நடித்து மூர்த்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கோபியின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அதேசமயம் இந்நிகழ்ச்சியை நடத்த விடாமல் கோபி செய்யும் திட்டங்கள் குடும்ப உறுப்பினர்களால் முறியடிக்கப்பட்டு வருகிறது.
கடைசி முயற்சியாக கோபி ஈஸ்வரி அம்மாவிடம் சென்று தனக்கு ஆஃபீஸில் முக்கியமான வேலை என்று சொல்ல கோபத்தின் உச்சத்திற்கே ஈஸ்வரி அம்மா செல்கிறார். நீ ஒருவேளை வீட்டை விட்டு போனால் இனிமேல் உன்னிடம் பேசவே மாட்டேன் என்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் கோபி முழிக்கிறார்.
இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் கோபி ராதிகாவிடம் மாட்டுவாரா இல்லை வழக்கம்போல தப்பிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.