பளார் என அறைந்த பாக்கியா...அதிர்ச்சியில் கோபி : எதிர்பார்ப்பில் பாக்கியலட்சுமி

baakiyalakshmi reshmapasupuleti பாக்கியலட்சுமி
By Petchi Avudaiappan Mar 21, 2022 10:10 AM GMT
Report

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய ப்ரோமோ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல சீரியலான பாக்கியலட்சுமி ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இதன் நாயகன் கோபி குடும்பத்திற்காக மனைவியை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறான். அந்த சமயத்தில் கோபியை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது.

இதற்காக கோபி செய்யும் தகிடு தத்தங்கள், ஒரு பக்கம் பாக்யாவை எப்படி விவாகரத்து செய்வது என யோசனை என ரசிகர்களை நாளுக்கு நாள் எதிர்பார்ப்பில் எகிற வைக்கிறது. இதில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோடுக்கான ப்ரோமோவில்செழியன் - ஜெனிக்கும் இடையே சண்டை வர அதைப்பற்றி கோபி விசாரிக்கிறார். கோபத்தில் செழியன் தான் ஜெனியை விவாகரத்து செய்யப்போவதாக கூறுகிறார். இதனால் கோபத்தில் பாக்கியா செழியனை பளார் பளார் என அடிக்கிறார். இந்த வீட்டில் விவாகரத்து பற்றி யாரும் பேச கூடாதுன்னு பாக்கியா வார்னிங் கொடுக்க கோபி உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 

அதற்கு காரணம் கோபி  ராதிகாவை திருமணம் செய்ய பாக்கியாவிடம் விவாகரத்து பெற வேண்டும் என்பதால் அவரை பொய் சொல்லி ஏமாற்றி கோர்ட் வரை அழைத்து சென்று விட்டார். இப்போது கோபி- பாக்கியா விவாகரத்து வழக்கு கோர்டில் நடந்து கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.