பாக்கியாவிடம் ராதிகாவுடன் வசமாக சிக்கிய கோபி - பாக்கியலட்சுமி தொடரில் சிக்கிய வீடியோ
பாக்கியலட்சுமி தொடரின் கோபி. ராதிகா, பாக்கியா, செல்வி போன்ற கேரக்டர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இன்ஸ்டா ரீல்ஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் அனைத்து தரப்பு மக்களின் ஃபேவரைட்டாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். டிஆர்பியில் மற்ற சேனல்களின் சீரியல்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்த இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இதில் பாக்கியாவை ஏமாற்றும் கணவர் வேடத்தில் கோபியாக நடிகர் சதீஷ் நடிக்கிறார். அதே போல் இவரின் முன்னாள் காதலியாக ராதிகா ரோலில் ஜெனிஃபர் நடித்துக் கொண்டிருந்தார். சில காரணங்களுக்காக அவர் சீரியலை விட்டு விலக தற்போது பிக்பாஸ் புகழ் ரேஷ்மா அந்த ரோலில் நடித்து வருகிறார்.
திருட்டு தனம் செய்வது, குடும்பத்தை ஏமாற்றுவது, மாட்டிக் கொள்ளாமல் எஸ்கேப் ஆவது என கோபியின் ஏமாற்று வழிகள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு முறையும் கோபி வீட்டில் மாட்டிக் கொள்ள வேண்டும் என நினைக்காத ரசிகர்களே இல்லை. ஆனால் கடைசி நேரத்தில் ஏதாவது திருட்டு வேலை செய்து கோபி தப்பித்து விடுவார்.
இதனிடையே கோபி. ராதிகா, பாக்கியா, செல்வி போன்ற பாக்கியலட்சுமி கதாபாத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து செய்த இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோக்களை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
You May Like This