அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த மர்ம நபர்கள் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு
Kanchipuram
By Nandhini
அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டை மர்ம நபர்கள் அணிவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு
காஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்துள்ளனர்.
அத்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தியபோது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.