ஆக்கப்பூர்வமான திட்டங்கள் செயல்படுத்தும் விஜய் - அழகிரி பாராட்டு!

Vijay Thalapathy Vijay Makkal Iyakkham
By Jiyath Jul 14, 2023 05:26 AM GMT
Report

காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு பின் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.  

காங்கிரஸ் கூட்டம்

தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில் "காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம்" நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் புறக்கணித்தனர். செயல் தலைவர் ஜெயக்குமார் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை அழகிரி சந்தித்தார்.

அழகிரி பாராட்டு

லோக்சபா தேர்தலை ஒட்டி பொது சிவில் சட்டம் என்ற கூர்மையான ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற நினைப்பது எதிர்மறையான செயல்.

ஆக்கப்பூர்வமான திட்டங்கள் செயல்படுத்தும் விஜய் - அழகிரி பாராட்டு! | Azhagiri Praise Vijay Ibc 09 Cs

பொருளாதார ரீதியில் அனைவரும் சமம் என்று கூறலாம் ஆனால் கலாச்சார ரீதியில் சொல்லமுடியாது. காமராஜர் வாழ்நாள் முழுவதும் மதுவுக்கு எதிராகவே இருந்தார். அவர் பிறந்தநாளன்று டாஸ்மாக் கடைகளை ஒருநாளாவது மூடவேண்டும். மேலும், இரவு பாடசாலை அமைத்து ஆக்கப்பூர்வமான திட்டங்கள் செயல்படுத்த ஆர்வம் காட்டும் விஜய் மக்கள் இயக்கத்தைப் பாராட்டுகிறேன் என்று அழகிரி பேட்டியளித்துள்ளார்.