டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் பலி

Delhi Accident
By Nandhini Sep 09, 2022 06:19 AM GMT
Report

டெல்லியில் இன்று காலை 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

டெல்லி, ஷீஷ் மஹால் அருகே உள்ள ஆசாத் மார்க்கெட் பகுதியில் இன்று காலை 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி தற்போது 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

5 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

Azad market - Delhi