இன்று மாலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு - தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு

Kerala
By Thahir Sep 06, 2022 03:20 AM GMT
Report

வருகிற 8-ம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது.

சிறப்பு பூஜைகள் 

கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கின்றார்.

இன்று மாலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு - தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு | Ayyappan Temple Walk Opening This Evening

வரும் 10ம் வரை கோவிலில் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறுகின்றது. இந்த நிலையில் மாத பூஜை போலவே நெய்யபிஷேகம், கலச பூஜை, கலவ பூஜை, சகஸ்ர கலச பூஜை, படி பூஜை என அனைத்து பூஜைகளும் நடைபெறுகிறது.

வரும் 8-ம் தேதி ஓணம் சிறப்பு வழிபாடு மற்றும் ஓண சத்யா நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இதையடுத்து இன்று முதல் 10 ஆம் தேதி வரை நிலக்கடலில் உடனடி தரிசன முன்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.