கச்சத்தீவை கொடுக்கும் போது பாஜக என்ன செய்தது தெரியுமா?
இலங்கையின் பொருளாதார நெருக்கடி சிக்கலுக்கு தீர்வு காண இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கி உள்ளது. இந்தியா, இலங்கைக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவுக்கு சொந்தமானதாக இருந்து இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு தொடர்பாக பல விவாதங்கள் எழுந்துள்ளன. தற்போதைய நிலையில் கச்சத்தீவை இந்தியா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு திரும்ப பெறும்;
அல்லது கச்சத்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமையை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. கச்சத்தீவை தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி மீட்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆனால் கச்சத்தீவை இந்தியாவிடம் மீண்டும் கொடுப்பதற்கு ஈழத் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து அரசியல் விமர்சகர் அய்யநாதன் ஐபிசி தமிழுக்கு அளித்த நேர்காணல் உங்களுக்காக