மைல் கல்லுக்கு படையல் : வியக்க வைக்கும் ஆயுத பூஜை கொண்டாட்டம்

By Irumporai Oct 04, 2022 03:56 AM GMT
Report

சாலையோர மைல் கல்லுக்கு படையல், பூஜை செய்து ஆயுத பூஜை கொண்டாடிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள் ,நிறுவனங்களில் ,விவசாய கருவிகள் வாகனங்களுக்கு பூஜை செய்து மக்கள் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

மைல்கல்லுக்கு ஆயுத பூஜை

கரூர் மாவட்டம் ஒப்பிடமங்கலம் அருகே சாலையோர மைல் கல்லுக்கு படையல் இட்டு பூஜை செய்து சாலை பணியாளர்கள் ஆயுத பூஜையை கொண்டாடினர்.

மைல் கல்லுக்கு படையல் : வியக்க வைக்கும் ஆயுத பூஜை கொண்டாட்டம் | Ayutha Pooja At The Roadside Mile Stone

அதேபோல் கோயமுத்தூரில் முக்காலி , சிறுவாணி செல்லும் சாலையில் உள்ள மைல் கல்லுக்கு மாலை அணிவித்து வாழைமரம் கட்டி வாழை இலையில் படையலிட்டு பூஜை செய்துள்ள சம்பவம் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் புகைப்படம்

திரைப்படத்தில் வந்த நகைச்சுவை போல் மைல் கல்லுக்கு படையலிட்டு வாழைமரம் கட்டி ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.