நாடு முழுவதும் ஆயுத பூஜை கொண்டாட்டம் கோலாகலம்
நாடு முழுவதும் ஆயுத பூஜை விழா மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆயுத பூஜை கொண்டாட்டம்
கல்விக்குரிய சரஸ்வதி,செல்வத்துக்குரிய லட்சுதி, வீரத்துக்குரிய பார்வதி போன்றோரை வணங்க கூடிய பண்டிகை தான் நவராத்திரி.
இந்த பண்டிகையின் 9வது நாள் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, தங்களது தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை வைத்து இன்று பூஜை செய்யப்படுவது வழக்கம்.
இதே போன்று கல்விக்கு உதவும் சரஸ்வதியை வழிப்படும் வகையில், கல்வி உபகரணங்களை வைத்து பூஜை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
பூஜையின் போது சாமிக்கு சுண்டல், பழம், அவல், பொரி ஆகியவற்றை படைத்து கொண்டாடிகின்றனர்.