ஆயுத பூஜை விடுமுறை - சென்னையில் இன்று இரவு 12 மணிவரை மெட்ரோ சேவை

chennai metro ayudha pooja leave
By Anupriyamkumaresan Oct 13, 2021 01:04 PM GMT
Report

தொடர் விடுமுறையையொட்டி மக்கள் வெளியூர் செல்வதால் சென்னையில் இன்றிரவு 12 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ இன்று (13.10.2021) நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன. தொடர்‌ விடுமுறை நாட்களை ஒட்டி வெளியூர்‌ செல்லும்‌ பயணிகளின்‌ வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ இன்று நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன.

நெரிசல்மிகு நேரங்களில்‌ மாலை 05.00 மணி முதல்‌ இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில்‌ இயக்கப்பட்டு வரும்‌ மெட்ரோ ரயில்‌ சேவைகள்‌ இன்று மட்டும்‌ இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை விடுமுறை - சென்னையில் இன்று இரவு 12 மணிவரை மெட்ரோ சேவை | Ayudha Pooja Leave Chennai Today 12Pm Metroservice

மேலும்‌, இன்று இரவு 10:00 மணி முதல்‌ நள்ளிரவு 12:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில்‌ மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ இயக்கப்படும்‌ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை தடுப்பதற்காக அனைத்து பயணிகளும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிந்திருப்பதுடன்‌, தனிமனித இடைவெளியைக்‌ கடைபிடித்து பயணம்‌ செய்ய் வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.