ஆதிபுருஷ் படத்தை தடை செய்யணும் : ராமர் கோவில் தலைமை குரு கோரிக்கை

By Irumporai 1 மாதம் முன்

ஆதிபுருஷ் படத்தினை தடைசெய்ய வேண்டும் என ராமர் கோயிலின் தலைமை குரு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ஆதிபுருஷ் படம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார்.

இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள படம் ஆதிபுருஷ்,  ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.

ஆதிபுருஷ் படத்தை தடை செய்யணும் : ராமர் கோவில் தலைமை குரு கோரிக்கை | Ayodhya Ram Temple Immediate Ban On Adipurush

படத்திற்கு தடைகோரும் குரு

குறிப்பாக இந்த படத்தில் சரியாக அனிமேஷன் செய்யப்படவில்லை என் இணையவாசிகள் கடும் விமரசனத்தை முன் வைத்து வந்தனர்.

இந்த நிலையில் ஆதிபுருஷ் படத்தை வெளியிடக் கூடாது என்றும் அதன் வெளியீட்டை தடை செய்ய வேண்டும் என அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குரு கூறியுள்ளார்.

 ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்துள்ள நடிகர் பிரபாஸ், செங்கோட்டையில் நடந்த தசரா விழாவில் கலந்து கொண்டு ராவண பொம்மையை அம்பு விட்டு அழித்த சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில்.

ஆதிபுருஷ் படத்தை தடை செய்யணும் : ராமர் கோவில் தலைமை குரு கோரிக்கை | Ayodhya Ram Temple Immediate Ban On Adipurush

 படத்திற்கு எதிராக படத்தையே தடை செய்ய வேண்டும் என அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் தலைமை குருவான சத்யேந்திர தாஸ், ஆதிபுருஷ் படத்திற்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர் மற்றும் அனுமனை தவறாக சித்தரித்துள்ளனர். ஆகவே அதன் வெளியீட்டை தடை செய்ய வேண்டும் என கண்டித்துள்ளார்.