கேன்சரால் பாதித்த ஆயிரத்தில் ஒருவன் நடிகர் - உதவி கேட்டு கதறும் குடும்பம்

Tamil Cinema
By Sumathi May 30, 2023 05:30 PM GMT
Report

ஆயிரத்தில் ஒருவன் பட நடிகர் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.

சண்முகராஜன்

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சோமு. இவர், எம்ஜிஆர், சிவாஜி, , கமல்ஹாசன் ஆகியோர் நடித்த திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர். கப்பலோட்டிய தமிழன், அபூர்வ சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தும் உள்ளார்.

கேன்சரால் பாதித்த ஆயிரத்தில் ஒருவன் நடிகர் - உதவி கேட்டு கதறும் குடும்பம் | Ayirathil Oruvan Shanmugarajan Suffering Cancer

இவரது மகன் சண்முகராஜன் என்ற ராஜ முஸ்தபாவும் கடந்த காலங்களில் சாவி, ஊமை விழிகள் மற்றும் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஓசூர் அருகே பாகலூர் சாலையில் உள்ள தனியார் வாடகை குடியிருப்பில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

கேன்சர் பாதிப்பு

இந்நிலையில், தற்போது வாய் புற்றுநோய் காரணமாக சண்முகராஜன் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கி 2 கால்களும் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகிறார்.

கேன்சரால் பாதித்த ஆயிரத்தில் ஒருவன் நடிகர் - உதவி கேட்டு கதறும் குடும்பம் | Ayirathil Oruvan Shanmugarajan Suffering Cancer

தங்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், நடிகர் சங்கமும் கருணையோடு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று மனைவி நகினா ராஜ் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் ஸ்டண்ட் சோமு என்ற பெயர் ஒரு வீதிக்கு வைத்து போற்றப்பட்ட ஸ்டண்ட் சோமுவின் மகன் ஆதரவின்றி தவித்து வருவது பெரும் வேதனைக்குரியதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.