இந்த நபரைத்தான் திருமணம் செய்யப்போகும் ஆயிஷா... - வைரலாகும் புகைப்படம்... - ரசிகர்கள் வாழ்த்து...!

Tamil Cinema Marriage
By Nandhini Feb 16, 2023 05:10 PM GMT
Report

நடிகை ஆயிஷா திருமணம் செய்யப்போகும் நபர் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை ஆயிஷாவிற்கு விரைவில் திருமணம்

பிரபலமான தொலைக்காட்சி தொடர் நடித்து வந்த ஆயிஷா, பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிக்பாஸில் நடிகை ஆயிஷாவுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.20 ஆயிரம் கொடுக்கப்பட்டதாகவும், மொத்தம் 12.50 லட்சம் சம்பளமாக வாங்கியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகை ஆயிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ஃபேஷன் புகைப்படக் கலைஞர் ஹரன் ரெட்டிக்கும், ஆயிஷாவுக்கும் கடந்த பிப்ரவரி 14ம் நாள், காதலர் தினத்தன்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த நிச்சயதார்த்தத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்களை ஆயிஷா வெளியிட்டுள்ளார். ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். "நிச்சயமாக இது எங்கள் விருப்பமான பிரேம்" என்று ஆயிஷா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஆயிஷாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

ayesha-marriage-viral-photo