ஈரானின் முதல் தலைமை மதகுரு இந்திய வம்சாவளியா?

Ayatollah Ali Khamenei
By Fathima Mar 01, 2026 07:36 AM GMT
Report

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா கமெனி கொல்லப்பட்டார், இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

இந்திய வம்சாவளியினர்

ஈரானில் முதல் தலைமை மதகுருவான அயதுல்லா ரூஹோல்லா கோமேனி சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாது.

கோமேனியின் தாத்தா சையத் அகமது மூசாவி இந்தி, கி.பி. 1800-களில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கிண்டூர் கிராமத்தில் பிறந்தவர் ஆவார்.

1830ம் ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வெளியேறி ஈரானுக்கு குடியேறினார், இந்திய பூர்வீகம் என்பதை காட்டுவதற்காக தன் பெயரின் கடைசியில் இந்தி என சேர்த்துக்கொண்டார்.

ஈரானின் முதல் தலைமை மதகுரு இந்திய வம்சாவளியா? | Ayatollah Khamenei Indian Connection

ஷியா பிரிவில் அதிக ஈடுபாடு கொண்டதால் உயர் பதவியை அடைந்தார், இவரது குழந்தைகளில் ஒருவர் தான் முஸ்தபா.

இவரது மகன் தான் அயதுல்லா ரூஹோல்லா கோமேனி, 1989-ல் அயதுல்லா ரூஹோல்லா கோமேனி மறைந்ததையடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அயதுல்லா கமேனி அடுத்த தலைமை மதகுருவாக பதவியேற்றார்.

இவரும், இவரது குடும்பத்தினருமே தற்போதைய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.