காயத்ரி ரகுராம் அதிரடி நீக்கம் ... பாஜக தலைவர் அண்ணாமலையின் அடுத்த அதிரடி

Gayathrie BJP K. Annamalai
By Petchi Avudaiappan May 06, 2022 05:59 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 44 பேர் அடங்கிய பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

காயத்ரி ரகுராம் அதிரடி நீக்கம் ... பாஜக தலைவர் அண்ணாமலையின் அடுத்த அதிரடி | Ayathri Raghuram Removed From The Posting By Bjp

தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக அதன்பின் 2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை கட்சியில் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் முதல் கட்டமாக பல்வேறு நிர்வாகிகள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட பார்வையாளர்கள், துணை தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 


அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்பிக்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் ஆகியோருக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக முன்னாள் எம்பி, சசிகலா புஷ்பா, பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜூவுக்கும் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 11 பேர் இடம் பெற்றுள்ளனர். 

இதேபோல் எம்.முருகானந்தம், இராம ஸ்ரீநிவாசன், பொன் வி.பாலகணபதி, ஏ.பி.முருகானந்தம், பி.கார்த்தியாயினி உள்ளிட்ட 5 பேர் மாநில பொது செயலாளர்களாகவும், கராத்தே தியாகராஜன், கே.வெங்கடேசன், சுமதி வெங்கடேசன், டி.மலர்கொடி, எஸ்.மீனாட்சி, வினோஜ் பி.செல்வம், எஸ்.சரவணகுமார், எம்.மீனாதேவ், ஏ.அஸ்வத்தாமன், ஆர்.அனந்த பிரியா, ப்ரமிளா சம்பத், எஸ்.சதிஷ்குமார், எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 13 பேர் மாநில செயலாளர்களாகவும், எஸ்.ஆர்.சேகர் மாநில பொருளாளராகவும், எம்.சிவசுப்பிரமணியன் இணை பொருளாளராகவும், எம்.சந்திரன் மாநில அலுவலக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாநில அளவில் மகளிர் அணி தலைவராக ஆர்.உமாரதியும், இளைஞர் அணி தலைவராக எம்.ரமேஷ் சிவாவும், விவசாய அணி தலைவராக ஜி.கே.நாகராஜ் , எஸ்சி பிரிவு தலைவராக தடா பெரியசாமியும், எஸ்டி பிரிவு தலைவராக எஸ்.சிவபிரகாசமும், சிறுபான்மையினர் அணித் தலைவராக டெய்சி சரணும், ஓபிசி அணி தலைவராக எஸ்.சாய் சுரேசும்,மாநில செய்தி தொடர்பாளர்களாக முன்னாள் எம்பிக்களான சி.நரசிம்மன், எஸ்.கே.கார்வேந்தன் ஆகியோரும், எஸ்.ஆதவன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் முழுக்க முழுக்க அண்ணாமலை ஆதரவாளர்களுக்குத்தான் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு  அப்பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக பாஜகவின் கலை கலாச்சார பிரிவினுடைய மாநில தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் தனது அணி நிர்வாகிகள் சிலரை அண்ணாமலை அனுமதி இல்லாமல் நீக்கியதாக கூறப்பட்டது. 

காயத்திரியின் இந்த அறிவிப்பு செல்லாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்ட நிலையில் தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பதவி பறிக்கப்பட்ட நிலையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி என குறிப்பிட்டுள்ளார்.