டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வீரர் மாற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அக்ஷர் படேலுக்குப் பதில் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் மாற்றம் செய்ய இந்திய அணிக்கு அக்டோபர் 15 வரை அவகாசம் உள்ளது.

இந்த நிலையில் பிரதான அணியில் இருந்த ஆல்-ரௌண்டர் அக்ஷர் படேல் தயார் நிலை வீரர்கள் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் தயார் நிலை பட்டியலில் இருந்த ஷர்துல் தாக்குர் பிரதான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்