‘’ கண்ணா இது காசு கொடுத்து கூடுன கூட்டம் இல்ல ‘’ - அக்சர் படேல் , ரவீந்திர ஜடேஜா வைரலாகும் புகைப்படம்

Jadeja AxarPatel AjazPatel
By Irumporai Dec 06, 2021 09:38 AM GMT
Report

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது.டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.

கடைசியாக இந்திய அணி 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதற்கு பின்னர் 9 ஆண்டுகளாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் இழந்ததே இல்லை.

இதனால், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இந்தியாவின் 14ஆவது டெஸ்ட் தொடர் வெற்றி பெற்றது. இந்தியாவில் பிறந்து நியூசி.,யில் செட்டிலான ரச்சீன் ரவீந்திரா, அஜாஸ் படேல் ஆகியோர் சிறப்பாக ஆடினர். முதல் டெஸ்ட் போட்டியின்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ரச்சின், அந்த போட்டி டிராவாக முக்கிய காரணமானார். 

இந்த நிலையில், போட்டி முடிந்தபின், இந்திய வீரர்கள் அக்சர், ஜடேஜா ஆகியோரும், நியூசிலாந்து வீரர்கள் ரச்சினும், அஜாஸூம் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி உள்ளது.

ஒருவரது பெயரின் இரண்டாம் பாதியில் இன்னொருவரின் பெயர் தொடங்குவதால் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படத்தை அஷ்வின் எடுக்க, பிசிசிஐ பகிர, இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.