சிறந்த நூல்களுக்கு செம்மொழி இலக்கிய விருதுகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin
By Fathima Jan 18, 2026 08:17 AM GMT
Report

ஆண்டுதோறும் தேசிய அளவில் சிறந்த நூல்களுக்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தனது சிந்தனைகளை பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்பது தான் புத்தகங்களின் நோக்கம், மொழி என்பது மக்களை பிரிக்கக்கூடிய சுவர் அல்ல, உலக மக்களை இணைக்கக்கூடிய பாலம் என தெரிவித்தார்.

சிறந்த நூல்களுக்கு செம்மொழி இலக்கிய விருதுகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Awards Announced By Mk Stalin

2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது குறித்து கவலை தெரிவிதித்த முதலமைச்சர், கலை இலக்கிய விருதுகளில்கூட அரசியல் தலையீடு இருப்பது ஆபத்தானது என எச்சரித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது மொழி பெயர்க்கப்பட்ட 84 நூல்களை வெளியிட்டதுடன், தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியத் திட்டத்தின் கையேட்டையும் வெளியிட்டார்.