தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடல் நல்லடக்கம் - உடலை தோலில் சுமந்து சென்ற வைரமுத்து

Government of Tamil Nadu Tamil Nadu Police Vairamuthu Thangam Thennarasu
By Thahir Nov 22, 2022 06:00 PM GMT
Report

மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் அவர்களின் இறுதி சடங்கு , காவல் துறை மரியாதையுடன் மயிலாப்பூர் மயானத்தில் நடைபெற்றது.

முதலமைச்சர் நேரில் அஞ்சலி 

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் பிரபல தமிழறிஞருமான அவ்வை நடராஜன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார்.

அவரது இறப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும் , பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் நேரில் வந்தும், இணையம் வாயிலாகவும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

உடலை தோலில் சுமந்து சென்ற வைரமுத்து 

அவரது உடல் அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாய் கொண்டுவரப்பட்டு மயிலாப்பூர் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தமிழக காவல்துறை சார்பில் அவருக்கு இறுதி மரியாதை கொடுக்கப்பட்டது .

Avvai Natarajan

இந்த இறுதி சடங்கில், அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

அவ்வை நடராஜன் உடலை மயானத்திற்குள் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் சுமந்து சென்றனர். பின்னனர் அவ்வை நடராஜன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.