குளிர்காலத்தில் இதையெல்லாம் மறந்தும்கூட சாப்பிடாதீங்க
குளிர்ந்த நிலையில் உள்ள பால், சாதம் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
குளிர் காலம்
இவை ஜீரண சக்தியை பலவீனப்படுத்தும். அதேபோல், உடல் எடை கூடும் என பயந்து நெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை தவிர்க்கக் கூடாது.

குளிர்காலத்தில் வாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சருமம் மற்றும் உட்புற உறுப்புகள் வறட்சியடையாமல் இருக்க உணவில் சிறிதளவு நெய் சேர்த்துக்கொள்வது நல்லது.
சிறந்த உணவு
மேலும் பரோட்டா, சப்பாத்தி போன்ற உலர்ந்த உணவுகளை மட்டும் அதிகம் உண்ணாமல், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்வது நல்ல செரிமானத்திற்கு வழிவகுக்கும்.
புதிதாக சமைத்த சூடான உணவுகளையும், உடலுக்கு கதகதப்பை தரும் சூப் வகைகளையும் உட்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இந்த சீசனில் உடல் நலனை பேண இந்த உணவு மாற்றங்களை கடைபிடிப்பது முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.