கோடைகாலத்தில் கிடைக்கும் நாவல் பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? - அதிர்ச்சி தகவல்

Healthy Food Recipes
By Petchi Avudaiappan May 20, 2022 08:19 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

இந்தியாவில் பல பழ வகைகள் இருக்கும் நிலையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் கிடைக்கக் கூடிய நாவல் பழத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பொதுவாக மாம்பழம், நுங்கு, வெள்ளரிக்காய், முந்திரிப் பழம், நாவல் பழம், தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் இந்த காலக்கட்டத்தில் கிடைத்தாலும் நாவல் பழத்திலும் அதிக நன்மைகள் உள்ளது. 

 இனிப்பாகவும், புளிப்புச் சுவை கொண்டதாகவும் உள்ள நாவல் பழங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாக உள்ளது. கிராமப்புறங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் இந்தப் பழங்களுக்காக காடுகள் அல்லது சாலையோர நாவல் மரங்களை நோக்கி படையெடுப்பவர்கள் ஏராளம். 

  • வயிற்று வலி, நீரிழிவு, கீல்வாதம் போன்ற பிரச்சினைகளுக்கு நாவல் பழம் நன்மையளிக்கக்கூடியது. ஆனால் சில உடல் நல பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும் நாவல் பழங்களை அளவோடு சாப்பிட வேண்டும் அல்லது முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
  • நாவல் பழங்களை அதிகம் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அதேபோல் அளவு மிகுந்தால் குறைவான ரத்த அழுத்தப் பிரச்சனை வந்துவிடும் என்பதால் அளவோடு சாப்பிட பழகுங்கள். 
  • நாவல் பழங்களை அளவுக்கு மிகுதியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படும். 
  •  முகத்தில் பரு அல்லது சருமத்தில் கட்டி போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. காரணம் நாவல் பழங்கள் சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். 
  • இயல்பாகவே நாவல் பழங்கள் புளிப்புச் சுவை கொண்டது என்பதால் இது அதிகம் சாப்பிடும் நபர்களில் சிலருக்கு வாந்தி ஏற்படக் கூடும் என்பதால் அளவாக எடுத்துக் கொள்ளுங்கள்.