காலையில் எழுந்ததும் இந்த விஷயங்களை செஞ்சிராதீங்க.. மோசமான தீங்கு விளைவிக்கும்!
காலையில் எழுந்ததும் செய்யக்கூடாத விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
காலை
ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் புத்துணர்ச்சியாக ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பித்தால் அந்நாள் முழுவதும் நன்றாக இருக்கும் என்று மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது. அந்தவகையில், நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் செய்யும் சில பழக்கங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவிக்கிறது.
குறிப்பாக காலையில் எழுந்தவுடன் தெரிந்தோ தெரியாமலோ சில பழக்கங்களை பின்பற்றுகிறோம். இதன் காரணமாக அந்த நாள் முழுவதும் சோம்பல், சோர்வு ஆரோக்கியம் இல்லாமல் இருக்கலாம்.
இது போன்ற பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மேலும், காலையில் எழுந்தவுடன் நாம் செய்யும் சில பழக்கங்கள் அந்நாள் பாதிப்பதை மட்டுமின்றி பல உடல்நல குறைவுகளும் ஏற்படுகிறது.
காலை அதிக தூக்கம்,
காலையில் படுக்கையில் இருந்து எழுவதே ரொம்பவே சிரமமாக உணர்வார்கள்.இன்னும் சற்று நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் இப்படி காலையில் அதிக நேரம் தூங்குவது நல்லதல்ல. ஏனெனில் இது ஒரு நாள் முழுவதும் சோர்வாக வைத்திருக்கும்.
அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து இப்படி செய்து வர ஆரோக்கியமும் பாதிக்கப்படும். எழுந்தவுடன் மொபைல் பார்ப்பது, காலையில் எழுந்தவுடன் முதலில் மொபைல் பார்ப்பதை பழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் இது ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும். மொபைலில் இருந்து வரும் நீல ஒளி உங்கள் கண்களை மோசமாக பாதிக்கும். அதுமட்டுமின்றி நாள் முழுவதும் சோர்வாக உணர்வீர்கள்.
தண்ணீர் பருகாமல் இருப்பது,
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதை தவிற்க்ககூடாது. நிறைய தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்க வேண்டும்.
ஏனெனில் இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, நாள் முழுவதும் உற்சாகமாக உணர வைக்கிறது. அதிலும், வெறும் வயிற்றில் சூடான நீர் குடித்தால் மலச்சிக்கல், சிறுநீர் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
புகைப்பிடிப்பது,
காலை எழுந்தவுடனே சிலர் புகை பிடிப்பதை பழக்கமாக்கியுள்ளனர். ஆனால் இந்த ழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
இந்த பழக்கத்தை கைவிடாவிட்டால் புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான நோய் வருவதற்கு வழிவகுக்கும்.
காலை உணவு தவிர்ப்பது,
காலை உணவு தவிர்த்தால் எடை குறைந்துவிடும் என்ற நம்பிக்கை பலர் மத்தியில் உள்ளது. ஆனால் அது உண்மையல்ல.
காலை உணவை தவிர்த்தால் உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே சத்தான உணவை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.