சனிக்கிழமையன்று தப்பித்தவறிக் கூட இந்த 5 விஷயங்களை செய்யாதீங்க..!
சனிக்கிழமை அன்று செய்யக்கூடாத 5 விஷயங்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
சனிக்கிழமை
நவகிரகங்களில் ஒருவரான சனி பகவானுக்கு உகந்த நாள் தான் சனிக்கிழமை. ஒருவரின் ஆயுள் நீடிக்கவும், கர்ம வினைகள் நீங்கவும் காரணமாக இருப்பவர் சனீஸ்வர பகவான் தான்.
அந்த வகையில், சனீஸ்வரனின் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்கு அவருக்குரிய சனிக்கிழமையில் சில விஷயங்கள் செய்வதை தவிரத்திட வேண்டும்.
எண்ணெய் வாங்குவது
சனி பகவானுக்கு விருப்பமான பொருட்களில் ஒன்று கடுகு எண்ணெய். சனிக்கிழமையில் எந்த வகையான எண்ணெயையும் வாங்குவது துரதிர்ஷ்டவசமாக கருதப்படுகிறது.
எனவே இந்த நாள் அன்று எண்ணெய் வாங்குவது வீட்டில் கடனை அதிகரிக்கும். குடும்பத்தின் பிற நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.
கருப்பு காலணி அல்லது ஆடை அணிவது
இந்து மத புராணங்களின்படி, சனி பகவான் கருப்பு நிறத்தை விரும்புபவராவர். ஆனால் ஒரு பக்கம் மங்கள நிகழ்ச்சிகளில் கருப்பு உடை அணிவது அவருக்கு மிகவும் அதிருப்தி அளிக்கிறது.
சனிக்கிழமைகளில் கருப்பு காலணிகளை அணிவது உங்கள் தொழில் வாழ்க்கையை பாதிக்கிறது.மேலும், வேலையில் பதவி உயர்வு பெறுவதில் தடைகளை ஏற்படுத்தலாம்.
மது அருந்துதல்
மது பொதுவாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது விரும்பத்தகாத கவலைகளை ஊக்குவிக்கிறது மற்றும் சில கடுமையான உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.
எனினும் சனி கிழமையில் மது அருந்துவதால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
துடைப்பம் வாங்குதல்
செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் துடைப்பம் வாங்குவது வீட்டில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. நிலையற்ற நிதியை விளைவிப்பதாக நீண்ட கால புராணம் கூறுகிறது.
இது சனி பகவான் மட்டுமல்லாமல் லட்சுமி தேவியையும் கோபப்படுத்துகிறது.
கத்தரிக்கோல் வாங்குதல்
கத்தரிக்கோலை அலட்சியமாகப் பயன்படுத்தகக்கூடாது. ஏனெனில் இது குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதத்திற்கு வழிவகுக்கும்.
சனிக்கிழமையன்று கத்தரிக்கோல் வாங்குவது அல்லது கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது கூறப்படுகிறது. இதனால் குடும்பத்திலும், நண்பர்களிடையும் வாக்குவாதம் ஏற்படுத்தும்.