நாளை போகிப் பண்டிகை : சென்னை மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு
போகி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு சென்னை விமான நிலையம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற கூற்றுப்படி நாளை போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதி மக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறு சென்னை விமான நிலைய நிர்வாகம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று முதல் சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளான செயின்ட் தாமஸ் மவுண்ட்,பம்மல், பல்லாவரம், மீனம்பாக்கம் பகுதிகளில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப் பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில், போகி பண்டிகையில் எரிக்கப்பட்ட அடர்ந்த புகையால் 73 புறப்பாடு விமானங்களும் 45 வருகை விமானங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையம் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.