இனி ரேஷன் கடைகளிலேயே ஆவின் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் - அமைச்சர் நாசர் அறிவிப்பு
இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் பால் வளத்துறை அமைச்சர் நாசர் மாநிலக்கோரிக்கைகான விவாதத்தின்போது, இனி ரேஷன் கடைகளின் ஆவின் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவித்தார்.
தரம் ஒன்றை மட்டும் குறிக்கோளாக வைத்து ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றும் பால் வளத்துறையில் 10 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்ட வாணிபம், இப்போது தலைத்தூக்கி உள்ளது என்றும் என்றும் தெரிவித்த அமைச்சர், தீபாவளி பண்டிகைக்கு மட்டும் ரூ. 87 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
அதேபோல் இன்று தாக்கல் செய்யப்பட்ட பால்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில், சென்னையில் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2020-21 நிதியாண்டில் சென்னையில் ஆவின் பால் நாள் ஒன்றுக்கு 12.63 லட்சம் லிட்டர் விற்பனையாகியுள்ளது எனவும், 2021-22 நிதியாண்டில் 13.3 லட்சம் லிட்டர் பால் நாளொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், 2022-23 நிதியாண்டில் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு 15 லட்சம் லிட்டராக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.