இன்று முதல் ஆவின் பொருட்களின் விலை உயர்கிறது - தமிழக அரசு உத்தரவு
avinproducts
avinpriceincreased
avinghee
By Swetha Subash
தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது.
ஆவின் மையங்களில் கிடைக்கும் நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்கிறது.
அதன்படி 1 லிட்டர் ஆவின் நெய் ரூ. 515 இருந்து ரூ.535 ஆக உயர்ந்துள்ளது.
அரை லிட்டர் தயிர் ரூ.27 இருந்து ரூ.30 ஆகவும், குல்பி ரூ.25 இருந்து ரூ.30 ஆகவும், 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80ல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்கிறது.
ஆவின் நெய்யின் விலை கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.