ஆவின் நஷ்டத்தில் இயங்கவில்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்
By Irumporai
ஆவின் நிர்வாகம் நஷ்டத்தில் இயங்கவில்லை என அமைச்சர் மனோதங்கராஜ் கூறியுள்ளார்.பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவில் பகுதியில் செய்தியார்களை சந்தித்து பேசினார்.
ஆவின் நஷ்டம் இல்லை
அப்போது ஆவின் நிறுவனம் குறித்து பேசிய அமைச்சர் ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை. ஆவினின் மூலதன செலவுகளை உயர்த்தி வேறு செலவுகளை குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
உற்பத்தி அதிகரிக்கப்படும்
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிகை அதிகரிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் மலிவான விலையில் கொடுப்பதற்கான திட்டங்கள் ஒவ்வொன்றாக தீட்டப்படும். தினந்தொறும் 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் இந்த ஆண்டு இறுதிக்குள் 70 லட்சம் லிட்டராக அதிகரிக்கப்படும் என கூறினார்