2021 ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் இவர் தான் - கவுதம் கம்பீர் சொல்வது யாரை தெரியுமா?
2021 ஐபிஎல் தொடரின் சிறந்த வீரர் குறித்து முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
இதனிடையே இந்த வருட ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இளம் வீரரான ஆவேஸ் கான் தான் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நான்கு அணிகளின் ஒவ்வொரு வெற்றியிலும் சீனியர் வீரர்களை விட இளம் வீரர்களின் பங்களிப்பே மிக முக்கியமானதாக இருந்தது என கூறியுள்ளார்.
மேலும் இந்த வருட ஐபிஎல் தொடர் முழுவதிலுமே இளம் வீரர்களே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக இந்திய இளம் வீரர்கள் பலர் இந்த தொடரை பயன்படுத்தி கிரிக்கெட் உலகின் வெளிச்சத்தை பெற்றுள்ளனர். இந்த தொடரில் சிறப்பாக விளையாடி இளம் வீரர்களில் ஹர்சல் படேலுக்கு இந்திய அணியில் இதுவரை ஒரு போட்டியில் கூட இடம் கிடைத்தது இல்லை.
இனி வரும் காலங்களிலாவது ஷர்சல் பட்டேலுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என கம்பீர் கூறியுள்ளார். ஆனால் ஹர்சல் பட்டேலை விட டெல்லி அணியின் ஆவேஸ்கானிற்கு இடம் கொடுப்பதே இந்திய அணிக்கும் பயனுள்ளதாக அமையும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.