Wow.... பிரம்மிக்க வைக்கும் கிராஃபிக் காட்சிகள்.. - அவதார்-2 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு...! தெறிக்க விடும் ரசிகர்கள்..!
பிரம்மிக்க வைக்கும் கிராஃபிக் காட்சிகளோடு அவதார்-2 படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
அவதார் படம்
கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி ரூ.1000 கோடி பொருட்செலவில் உலகம் முழுவதும் வெளியானப் படம் 'அவதார்'.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகர்னி வீவர் உள்ளிட்டோர் நடித்தனர்.
முழுக்க முழுக்க வரலாற்று சயின்ஸ் பிக்ஷனாக உருவான இந்தப் படம் சினிமாவுலகை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம். வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை இப்படம் படைத்தது.
இதையடுத்து இந்தப் படத்தின் தொடர்ச்சி எனப்படும் அடுத்தடுத்த 5 பாகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியாகும் என்று இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார்.
அவதார்-2 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
இந்நிலையில் முதல் பாகம் வெளியாகி 13 ஆண்டுகள் கழித்து 2ம் பாகம் வெளியாக உள்ளது. ‘அவதார்- தி வே ஆஃப் வாட்டர்’ என்ற 2ம் பாகம் வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
25 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் இப்படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.
ரசிகர்கள் ஆவல்
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி லைக்குகளை வாரி அள்ளிக்கொண்டு வருகிறது.
அவதார் - தி வே ஆஃப் வாட்டர்’ படத்தைப் பார்க்க உலக முழுவதும் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதோ அந்த ட்ரெய்லர் வீடியோ -
On December 16, return to Pandora.
— Avatar (@officialavatar) November 2, 2022
Watch the brand-new trailer and experience #AvatarTheWayOfWater in 3D. pic.twitter.com/UtxAbycCIc