பிரம்மிக்க வைக்கும் கிராஃபிக் காட்சிகள்.. அவதார்-2 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

Avatar 2 AVATAR 2: THE WAY OF WATER
By Petchi Avudaiappan May 10, 2022 05:11 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

அவதார் படத்தின் இரண்டாம் பாகமான 'அவதார் தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி ரூபாய் 1000 கோடி பொருட்செலவில் உலகம் முழுவதும் வெளியானப் படம் 'அவதார்'. முழுக்க முழுக்க வரலாற்று சயின்ஸ் பிக்‌ஷனாக உருவான இந்தப் படம் சினிமாவுலகை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம். வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை இப்படம் படைத்தது.

இதையடுத்து இந்தப் படத்தின் தொடர்ச்சி எனப்படும அடுத்தடுத்த 5 பாகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியாகும் என்று இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார். அதன்படி இரண்டாம் பாகமான 'அவதார் தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் பிரம்மாண்டமான கிராஃபிக் காட்சிகளுடன் 3டி தொழில்நுட்பத்தில் உலகில் 160 மொழிகளில் ரிலீசாகவுள்ளது.

எங்கு சென்றாலும் இந்த குடும்பமே நமது கோட்டை என்ற கேப்ஷனுடன் டிரைலர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.