அப்பப்பா.... இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா...? வரலாறு சாதனைப் படைத்த ‘The Way of Water’ ..!
பல கோடியை அள்ளி ‘The Way of Water’ மாபெரும் வசூல் செய்து வரலாறு சாதனைப் படைத்துள்ளது.
அவதார் -
கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உறைய வைத்தது.
இப்படம் பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ள காட்சியாக அமைந்தது. வசூலிலும் அவதார் படம் சாதனைப்படைத்தது. இதுவரை 3 ஆஸ்கார் விருதுகளை அவதார் படம் தட்டித்தூக்கியது.
‘The Way of Water’
13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் கடந்த 16ம் தேதி வெளியானது.
இப்படம் உலக தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 4 மொழிகளில் மட்டும் வெளியான இப்படம் முதல் நாளே சுமார் 41 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனைப் படைத்தது.
மேலும், மார்வெல் பிளாக்பஸ்டர் ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ படத்தின் வசூல் சாதனையை இப்படம் முறியடித்துள்ளது. அவதார் 2 பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
வெளியான முதல் நாளில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ரூ. 53.10 கோடியும், ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் 32.67 கோடியும் சம்பாதித்தது. தி வே ஆஃப் வாட்டர் ஆரம்ப வார இறுதியில் ரூ. 100 கோடி வசூல் செய்யும் என்று பரவலாக கணிக்கப்பட்டது.
வரலாற்றுச் சாதனை படைப்பு
கடந்த மூன்று வாரங்களில் இந்தியாவில் மட்டும் இப்படம் வசூலை வாரி கொடுத்துள்ளது. சென்ற வாரம் இப்படம் 10.50 கோடியை ஈட்டியது. அதன் இந்திய நிகர மொத்தத்தை 304 கோடியாக வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் அதிக வசூல் செய்யப்பட்ட சர்வதேச திரைப்படமான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேமின் சாதனையை இப்படம் முறியடித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.373 கோடி வசூல் செய்து இப்படம் வரலாற்று சாதனையை படைத்துள்ளது.