அவதார் 2 படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? - வெளீயானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அவதார் திரைப்படத்தின் 2ஆம் பாகம் ரிலீஸ் ஆகும் தேதியை டிஸ்னி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆ,ம் ஆண்டு வெளியாகி ஒட்டுமொத்த உலக திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த அவதார் படம் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையையும் படைத்தது.படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வாயை பிளக்க வைக்கும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக இருந்தது.
இதனிடையே அவதார் படத்தின் 2 ஆம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படம் டிசம்பர் 2021 வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், அவதார் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் படத்தின் அடுத்த நான்கு பாகங்களை வெளியிடவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.