மதுரை அவனியாபுரம் பகுதியில் வெறி நாய் தொல்லை அதிகரித்துள்ளது
மதுரை அவனியாபுரம் பகுதியில் அதிகரிக்கும் வெறிநாய் அட்டகாசம் இதனால் நாய் கடிக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை. மதுரை மாநகர் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரம் தயாரிக்கப் படுகின்றன.
மேலும் மதுரை மாநகரில் பிடிக்கப்படும் வெறிநாய்கள் வெள்ளகல் பகுதிகளில் வைத்து ஊசி செலுத்தப்பட்ட பிறகு அங்கேயே விடப்படுகின்றன. மேலும் அங்கு சுற்றித் திரியும் நாய்கள் நூல் உள்ள கழிவு, கோழிகளை உண்பதோடு சுற்றுப்புற பகுதிகளுக்கு திரிந்து சாலைகளில் செல்லும் பொது மக்களை கடிக்கின்றன. இன்று அவனியாபுரம் பஸ்டாண்.
மார்க்கண்டன் கோவில் பகுதிகளில் கடைக்கு சென்ற கமலம். பூமி. ஆறுமுகம் உள்ளிட்ட 5 பேர்களை வெறிநாய் கடித்து குதறியது
இதனால் பொதுமக்கள் மிகவும் வெளியில் வர அச்சப்படுகின்றனர் .
மேலும் அவனியாபுரம் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளொன்றுக்கு 50 க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
எனவே வெறி நாய்களை கட்டுப்படுத்தவும் உரிமைகளை பாதுகாக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்