ஆவணி அவிட்டம் சிறப்பு என்ன? - ஏன் பூணூலைப் புதுப்பிக்க வேண்டும்?

avani avittam special
By Anupriyamkumaresan Aug 22, 2021 03:22 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in ஜோதிடம்
Report

ஆவணி அவிட்டம் திருநாளை ஆற்றங்கரை, குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கு தொடங்குவர்.கணபதி பூஜையுடன் தொடங்கும் இந்த விரதம், புண்யாவாகனம் செய்த பின்னர் பஞ்சகவயம் அருந்தி உடல், மனம் மற்றும் இருப்பிடத்தைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

ஆவணி அவிட்டம் சிறப்பு என்ன? - ஏன் பூணூலைப் புதுப்பிக்க வேண்டும்? | Avani Avittamm Day Special

இந்த விரத நியமங்களைக் கடைப்பிடித்து, பூணூல் அணிந்து கொண்டவர்களை எவ்வித துன்பமும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறையும் என்பது ஐதீகம். ஆவணி அவிட்டம் எனும் ஆண்டு சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு வரக்கூடிய பெளர்ணமி தினத்தில் கடைப்பிடிக்கப்படும் மகத்தான வழிபாடு நாளாகும்.

இது தினத்தை ரிக், யசுர் வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள் விநாயகர் சதுர்த்தி அன்று கொண்டாடுவார்கள். இது ஒரு கூட்டு வழிபாடாகும்.

ஆவணி அவிட்டம் சிறப்பு என்ன? - ஏன் பூணூலைப் புதுப்பிக்க வேண்டும்? | Avani Avittamm Day Special

ஆவணி அவிட்டம் எப்படி கொண்டாடப்படும் ?

இந்த அற்புத திருநாளை ஆற்றங்கரை, குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கு தொடங்குவர். கணபதி பூஜையுடன் தொடங்கும் இந்த விரதம், புண்யாவாகனம் செய்த பின்னர் பஞ்சகவயம் அருந்தி உடல், மனம் மற்றும் இருப்பிடத்தைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கிழக்கு திசையில் வாழை இலை போட்டு அதில் அரிசி பரப்பி அதன் மீது 7 கொட்டை பாக்கு வைத்து, அதில் சப்தரிஷிகளை ஆவாஹனம் செய்து தீபாராதனை செய்து நைவேத்தியம் படைக்க வேண்டும்.

அப்போது பஞ்சபூதங்களை வழிபாடு செய்வது உத்தமம். திருமணம் ஆகாத ஆண்கள் பூணூலை குருவிற்கும், வயதில் மூத்தவருக்கும் தானமாக தரலாம். புதிய பூணூல் அணிந்த அனைவரும் முதலில் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர். தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையர்களை நினைத்து எள்ளும், அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். பின்னர் தங்களின் பூணூலை புதுப்பித்துக் கொண்டு வேதங்களைப் படிக்கத் தொடங்கலாம்.

ஆவணி அவிட்டம் சிறப்பு என்ன? - ஏன் பூணூலைப் புதுப்பிக்க வேண்டும்? | Avani Avittamm Day Special

சமஸ்கிருதத்தில் இதற்கு உபாகர்ம என்று பெயர். அதாவது பொருள் தொடக்கம் என்பதாகும். இந்த தினத்தில் வேதங்களைப் படிக்கத் தொடங்குவதற்கு நல்ல நாளாகும். இந்த விரத நியமங்களைக் கடைப்பிடித்து, பூணூல் அணிந்து கொண்டவர்களை எவ்வித துன்பமும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறையும்.

பூணூல் வகைகள் :

கள்ளப்பூணூல், பிரம்மச்சாரி பூணூல், கிரஹஸ்தர் பூணூல், சஷ்டிஅப்த பூர்த்தி பூணூல் என்று நான்கு வகைப்படும்.

பூணூல் போட்டுக் கொள்ளக்கூடிய ஆண் பாலகனாக இருந்தால் பிரம்மச்சாரி எனும் அந்தஸ்திற்கு உயர்த்தப்படுகிறார். அதன் பின்னர் வேதங்களைக் கற்று தேற வேண்டும். அவன் பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பிரம்மச்சாரி பூணூல்:

ஒருவர் உபநயன விழா நடத்தி பூணூல் போடப்பட்டுவிட்டால் அவர் அதைக் கழற்றக் கூடாது. உபநயன விழா நடத்தாமல் ஆவணி அவிட்டம் அன்று மட்டும் சாஸ்திரத்திற்காகப் போடப்படும் பூணூலைக் கழற்றி விடலாம். இதையே கள்ளப் பூணூல் என்கிறோம்.

திருமணமாகாதவருக்கு பிரம்மச்சாரி பூணூல் போடப்படும். பிரமசாரி பூணூல், கள்ளப் பூணூலில் 3 நூல்கள் இணைத்து கட்டப்பட்டு, அதன் நடுவில் பிரம்ம முடிச்சு போடப்பட்டிருக்கும்.

கிரஹஸ்தர் பூணூல் :

திருமணமானவர்களுக்கு கிரஹஸ்தர் பூணூல் போடப்படும். இதில் ஆறு நூல்கள் இணைத்து கட்டப்பட்டிருக்கும்.

ஆவணி அவிட்டம் சிறப்பு என்ன? - ஏன் பூணூலைப் புதுப்பிக்க வேண்டும்? | Avani Avittamm Day Special

சஷ்டி அப்தி பூணூல் :

60 வயதான பின் சஷ்டி அப்த பூர்த்தி என்று அழைக்கப்படும் அறுபதாம் கல்யாணம் முடித்தவர்களுக்கு சஷ்டி அப்தி பூணூல் அணிவிக்கப்படும். இதில் 9 நூல்கள் இணைத்து கட்டப்பட்டு பிரம்ம முடிச்சு போடப்பட்டிருக்கும்.

ஆவணி அவிட்ட விரத மகிமை :

ஆவணி அவிட்டம் விரத நியமங்களைக் கடைப்பிடித்து பூணூல் அணிந்து கொண்டவர்களுக்கு எவ்வித துன்பங்களும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.