ஆவடி தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் - அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன்
திமுக உட்பட மாற்று கட்சிகளில் இருந்து அதிமுகவில் இணைவதால் 25 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என ஆவடி சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி. தமிழக சட்ட மன்ற தேர்தல் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடப்பட்டதை அடுத்து வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஆவடி சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வந்தனர்... ஆவடி பருத்திப்பட்டில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தமிழக அரசு செய்த சாதனைகள் மற்றும் ஆவடி தொகுதி மேம்பாட்டு குறித்தும் எடுத்துரைத்தார்..
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக உட்பட மாற்று கட்சியிலிருந்து ஆயிரம் பேர் இணைய உள்ளதாகவும், புதிதாக அதிமுகவிற்கு ரஜினி மக்கள் மன்றம் ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஏற்கனவே கடந்த ஆண்டு கொடுத்த விலையில்லா மிக்ஸி கிரைண்டர் தற்போது வாஷிங்மெஷின் வழங்க உள்ளதாக கூறினார்.
மேலும் ஓய்வு ஊதிய உயர்வு தொகை 2000 போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டம் திட்டங்கள் அதிமுகவுக்கு வெற்றியைத் தேடித் தரும் எனவும் ஆவடி தொகுதியில் தொடர்ந்து வரவேற்பும் எழுச்சியும் உள்ளதால் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் 25 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.