கவிழ போன ஆட்டோவை கரம் கொடுத்து தூக்கிய மனிதர்

Viral Video Auto
By Thahir Jun 25, 2021 08:52 AM GMT
Report

வளைவில் வேகமாக திரும்பியபோது, தலைக்கீழாக கவிழ இருந்த ஆட்டோவை ஒருவர் கையால் தூக்கிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கவிழ போன ஆட்டோவை கரம் கொடுத்து தூக்கிய மனிதர் | Auto Viral

மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வளைவில் ஆட்டோ ஒன்று வேகமாக திரும்ப முயன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் ஆட்டோ ஓட்டுனர் வேகமாக வளைவில் திருப்ப முயன்றதன் காரணமாக ஆட்டோ தலைக்கீழாக கவிழ இருந்தது. ஆனால் இதனைக்கண்ட அங்கிருந்த ஒருவர், சற்றும் யோசிக்காமல் தனது கையால் ஆட்டோவையும் அதற்குள் இருந்தவர்களையும் காப்பாற்றினார்.இந்த வீடியோவை வியப்புடன் வெளியிட்டிருந்த ஆனந்த் மஹிந்திரா, யாரேனும் இதனை டிஜிட்டல் தொழில்நுட்ப சொற்களில் விளக்கும்படி கூறியிருந்தார்.