ஆட்டோவில் மகனின் அழுகிய சடலம்! பேரக்குழந்தைகளுக்காக தாத்தாவின் நெகிழ்ச்சி செயல்
இந்தியாவில் தன்னுடைய இரண்டு மகன்களும் இறந்த நிலையில், பேரக்குழந்தைகளுக்காக தள்ளாத வயதிலும் ஆட்டோ ஓட்டி வருகிறார் தேஸ்ராஜ். மராட்டியத்தின் மும்பை நகரில் கார் என்ற பகுதியருகே ஆட்டோ ஓட்டும் பணியை செய்து வரும் முதியவர் தேஸ்ராஜ், 2 மகன்கள் இருந்தனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் வேலைக்கு சென்ற இவரது மூத்த மகன் வீடு திரும்பவில்லை, எங்கே தேடியும் கிடைக்காத நிலையில் ஒருவாரம் கழித்து ஆட்டோவில் சடலமாக கிடந்தார்.
இதனால் மனமுடைந்த போன தேஸ்ராஜ், பேரக்குழந்தைகளுக்காக உழைக்கத் தொடங்கினார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து 2வது மகனும் தற்கொலை செய்து கொண்டார், இதனால் மேலும் நொந்துபோன தேஸ்ராஜ்க்கு கூடுதல் சுமையும் வந்து சேர்ந்தது.

பேரக்குழந்தைகளை காப்பாற்ற வேண்டுமென இரவு பகல் பாராது உழைத்துள்ளார், 9ம் வகுப்பு படித்த பேத்தியின் கல்வி மற்றும் குடும்ப செலவுக்காக காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ஆட்டோ ஓட்டியுள்ளார். கிடைக்கும் வருவாயில் கல்வி செலவு போக சொற்ப தொகையை 7 பேர் கொண்ட குடும்பத்திற்கான செலவுக்கு வைத்துள்ளார்.
பல நாட்கள் சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லாத சூழலை விவரித்த தேஸ்ராஜ், தனது பேத்தி 12ம் வகுப்பு தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெற்ற மகிழச்சியில் அன்று நாள் முழுவதும் அதனை கொண்டாடும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு இலவச சவாரி செய்துள்ளார். டெல்லிக்கு பி.எட். படிக்க செல்ல வேண்டும் என்ற பேத்தியின் விருப்பத்திற்காக வீட்டை விற்றுள்ளார். பின் அவரது மனைவி, மருமகள் மற்றும் பேர குழந்தைகளை கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டில் விட்டுள்ளார்.
மும்பையில் தொடர்ந்து ஆட்டோ ஓட்டிய அவர், ஆட்டோவிலேயே சாப்பிட்டு, தூங்கியுள்ளார். வகுப்பில் முதல் மாணவியாக பேத்தி வந்ததில் தனது அனைத்து வலிகளும் மறைந்து விட்டன என்கிறார் பெருமையுடன்.
இவர் குறித்து சமூகவலைத்தளங்களில் தெரியவர, 200க்கும் மேற்பட்டோர் அளித்த நன்கொடையால் ரூ.5.3 லட்சம் தொகை கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.