ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பெட்ரோல்,டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆட்டோ உரிமையாளர்களும்,பயணிகளும் பயனடையும் வகையில் கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.
கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு டிஜிட்டல் மீட்டர் பொறுத்தப்பட்டு பிரிண்டிங் பில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை எஸ்.பி.ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆட்டோக்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டிருப்பதாகவும், பிரிண்டிங் பில் கொடுக்க செலவாகும் என்பதால் அதை மட்டும் இணைக்கவில்லை என்று கூறினார்.
இதையடுத்து ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க நீண்ட நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டாம். பெட்ரோல்,டீசல் விலை ஏற்ற,இறக்கத்திற்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கபட்பட்டுள்ளது.
மீட்டர் பொருத்தியும்,செயல்படுத்தாத ஆட்டோக்களை கண்டறிய போக்குவரத்து துறையும்,காவல் துறையும் திடீர் சோதனைகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.