தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டண உயர்வு
தமிழகத்தில் 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு, 13 ஆண்டுகள் கழித்து ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைத்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை அரசு கடந்த 2013-ஆம் ஆண்டில் நிர்ணயித்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

புதிய விதிமுறைகள்
இதன்படி, மாநிலம் முழுவதும் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் 1.8 கி.மீ. பயணத்திற்கு ரூ.50-ம், அதற்குப் பிறகு ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25-ம் வசூலிக்கலாம்.
மலைப்பாதைகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.60 ஆகவும், கூடுதல் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தில் 1.5 மடங்கு வசூலிக்கலாம். அத்துடன், காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ.1 கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.