தாய் சொன்ன ஒற்றை வார்த்தை - 10 ஆண்டுகளாக ஆட்டோ டிரைவர் செய்த சம்பவம்!
ஆட்டோ டிரைவர் செய்த நெகிழ்ச்சி சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாய் பாசம்
ஆந்திரா, எர்ணகுடம் கிராமத்தில் வசித்து வருபவர் மசகா கோபி(52). இவரது தாய் சத்யாவதி. 2012 இல் தனது கணவரை இழந்து மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் சத்யாவதி, தன் மகனிடம் ‛‛நான் உன்னுடனே இருக்க வேண்டும்.. எங்கு போனாலும் என்னையும் அழைத்து செல்.. வீட்டில் தனிமையில் இருக்க பிடிக்கவில்லை. உன்னை பற்றிய கவலை அதிகம் இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சத்யாவதியை உற்சாகப்படுத்த ஒரு நாள் அவரை ஆட்டோவில் கோபி அழைத்து சென்றுள்ளார். அப்போது தாயின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை கண்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பின் இருக்கையில் அமர்த்தி கொண்டு பயணம் செய்கிறார்.
மகன் செய்த செயல்
’இதனால், சில பயணிகளை இழக்கிறேன் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் தனக்கு கவலையில்லை . தாயின் முகத்தில் தெரியும் புன்னகை ஒன்றே போதும்’ என்று கோபி கூறுகிறார். மேலும் இதுதொடர்பாக தாய் சத்யாவதி கூறுகையில், என் கணவர் இறந்த பிறகு, நான் உடைந்து போனதாக உணர்ந்தேன்.
ஆனால், என் மகனுடன் அமர்ந்திருக்கும்போது, நான் மீண்டும் வலிமையாக உணர்கிறேன். நான் ஒரு நாள் வீட்டில் இருந்தாலும்கூட நான் பலவீனமாக உணர்கிறேன். " என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் கேட்போரையும், காண்போரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.