ஆட்டோ டிரைவரை விட்டு பிரிய மனமில்லாத ‘குரங்கு’ காட்டிய பாச விளையாட்டு - நெகிழ்ச்சி சம்பவம்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேவரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (42). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரவியின் ஆட்டோ மீது ஒரு ஏறியுள்ளது. அப்போது, ரவி அந்த குரங்கை விரட்டினார். ஆனால், அந்த குரங்கு ஆட்டோவை விட்டு செல்லாமல் ஆட்டோவிலேயே இருந்தது.
ரவி எங்கு சென்றாலும், சரி சாப்பிட்டாலும் அந்த குரங்கு ரவியை விட்டு இப்படி... அப்படி கூட நகரவில்லை. ரவியின் தலை மீது ஏறி, அவரை சுற்றி சுற்றி வந்துள்ளது. குரங்கு பிடியிலிருந்து ரவியால் விலமுடியாமல் திக்குமுக்காடினார்.
எப்போதும் ஆட்டோவில் குரங்கு இருந்து வந்ததால் பயணிகளும் ஆட்டோவில் ஏற மறுத்துள்ளனர். இதனால், ரவியால் ஆட்டோவை சரியாக ஓட்டமுடியவில்லை. இதனையடுத்து, ரவி ஒரு முடிவுக்கு வந்தார். குரங்கை தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகத்தில் நேற்று ஒப்படைக்க நினைத்தார்.
இதனையடுத்து, வனத்துறை அலுவலகத்துக்கு வந்த ரவி, குரங்கை ஒப்படைக்க முயன்றார். அப்போது, அந்த குரங்கு ரவியை விட்டு பிரிய மனமில்லாமல் தலை மீது அமர்ந்து கொண்டது.
இதனால் வனத்துறையினரும் குரங்கை பிடிக்க எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. அப்போது கோபத்தில் இருந்த குரங்கு, கடிப்பது போல் வாயை திறந்து வனத்துறையினரை மிரட்டியது.
ஒருவழியாக, வனத்துறை ஊழியர்கள், ரவியிடமிருந்து குரங்கை பிரித்தார்கள். ஆனாலும் குரங்கு ரவியை விட்டு இறங்கிய சில நிமிடங்களில் வனத்துறை ஊழியர்களை ஏமாற்றி விட்டு, மீண்டும் ரவியின் மேல் தாவி ஏறியது.
இது என்னடா வம்பா போச்சுன்னு.. என்று ரவி மீண்டும் நொந்து போனார். பிறகு ஒருவேளையாக வனத்துறையினர், குரங்கை பிடித்து விட்டு ரவி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், வனத்துறை ஊழியர்களின் பிடியிலிருந்து நேற்று மாலை அந்த குரங்கு தப்பியுள்ளது.
தேன்கனிக்கோட்டை ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்து ரவியை அங்குமிங்கும் குரங்கு தேடி பார்த்தது. ஆனால், குரங்கின் வருகையை முன்கூட்டியே அறிந்த ரவி, தற்போது தனது ஆட்டோவை வேறு இடத்தில் நிறுத்தி சவாரிக்கு சென்று வருகிறார்.
ஆட்டோ டிரைவரிடம் ‘குரங்கு’ காட்டிய பாச விளையாட்டை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர்.