அமைச்சர் உதயநிதியின் வாகனத்தின் குறுக்கே வந்த சரக்கு ஆட்டோ - விபத்தில் இருந்து தப்பித்த வாகனங்கள்
சேலத்தில் அமைச்சர் உதயநிதி சென்ற வாகனம் முன்பு சரக்கு ஆட்டோ புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குறுக்கே புகுந்த சரக்கு ஆட்டோ
சேலம் மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் எடப்பாடி வழியாக திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது சர்வீஸ் சாலையின் முன்பக்கம் பாதுகாப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. பின்னால் அமைச்சர் உதயநிதியின் வாகனமும் கே.என்.நேரு வாகனங்கள் சென்றது.
இந்த நிலையில் கொண்டலாம்பட்டி அருகே அமைச்சர்களின் வாகனங்கள் சென்ற போது திடீரென போக்குவரத்து விதிகளை மீறி நீண்ட கம்பிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த அமைச்சர்களின் கான்வாய் வாகனங்களுக்குள் புகுந்தது.
பெரும் விபத்து தவிர்ப்பு
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு வாகன ஓட்டுநர்கள் கான்வாய்க்குள் வந்த ஆட்டோவில் இருந்து மோதமல் இருக்க தங்களது வாகனங்களை இடது புறமாக திருப்பினர்.
இதனால் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண் திட்டின் மீது வாகனங்கள் மோதி நின்றது. இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
இதையடுத்து சரக்கு வாகனம் ஓரங்கட்டப்பட்ட நிலையில், அமைச்சர் உதயநிதியின் கான்வாய் தடையின்றி அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றது.