உயிரை பணயம் வைத்து குடிநீர் எடுத்து வரும் மக்கள்- அதிகாரிகள் கண்டு கொள்வார்களா?

people drink water Ramanathapuram
By Jon Mar 15, 2021 02:02 PM GMT
Report

ராமநாதபுரத்தில் குடிநீருக்காக, உயிரை பணயம் வைத்து தண்ணீரில் நீந்தி சென்று குடிநீர் எடுத்து வரும் கிராம மக்களின் அவலநிலை தற்போது பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ராமநாதபுரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கருக்காத்தி கிராமம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த கிராமத்தில் கண்மாயின் நடுவில் உள்ள திறந்தவெளிக் கிணறு, மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. கண்மாயில் தண்ணீர் இல்லாத காலங்களில் கிராம மக்கள் நடந்து சென்று கிணற்று ஊற்று நீரை இறைத்து வருவது வழக்கமாகும். நடப்பாண்டு பெய்த கனமழையால் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் தண்ணீர் எடுக்க முடியாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

  உயிரை பணயம் வைத்து குடிநீர் எடுத்து வரும் மக்கள்- அதிகாரிகள் கண்டு கொள்வார்களா? | Authorities People Risking Drinking Water

இந்நிலையில், கிராம இளைஞர்களின் உதவியோடு கண்மாய் நடுவே உள்ள கிணற்றில், ஆபத்தை உணராமல் நீந்தி சென்று, உயிரை பணயம் வைத்து மக்கள் குடிநீரை எடுத்து வருகிறார்கள்.

எனவே, காவிரி கூட்டுக்குடிநீர் உள்ளிட்ட எந்தவித வசதி இல்லாததால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, கிணற்றுக்கு செல்ல பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.