Browsing History யால் சிக்கிய கணவர் - கோபத்தில் சாம்பலை சாப்பிட மனைவி
துரோகம் செய்த கணவரின் சாம்பலை மனைவி சாப்பிட்டுள்ளார்.
ஜெசிகா வைட்
அமெரிக்காவில் வசித்து வரும் கனேடிய எழுத்தாளர் ஜெசிகா வைட் (Jessica Waite) இறந்த பாஸ்டர்ட்ஸ்கான ஒரு விதவையின் வழிகாட்டி என்ற பெயரில் எழுதிய சுயசரிதை சமீபத்தில் வெளியானது.
இதில் தனது கணவர் சீன் வைட் (Sean Waite) பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது, அதை தான் கண்டுபிடித்தது பற்றியும் எழுதியுள்ளார்.
பிரவுசிங் ஹிஸ்டரி
2015 ஆம் ஆண்டு பணி நிமித்தமாக டெக்சாஸ்கு சென்ற அவரது கணவர் அங்கு உயிரிழந்தார். அவரது உடல் எங்கு உள்ளது என்பது பற்றி விசாரிக்க ஹவுஸ்டன் நகர மருத்துவமனையின் அலைபேசி எண்ணை தேட கணவரின் i-Pod ஐ எடுத்து பார்த்துள்ளார்.
ஹவுஸ்டன் என்று தேடியதுமே அவரது பிரவுசிங் ஹிஸ்டரியில் ஹவுஸ்தண் எஸ்கார்ட்ஸ் பற்றி இதற்கு முன்னர் அவர் தேடிய ஏராளமான தேடுதல்கள் வந்துள்ளது. பல்வேறு இடங்களில் உள்ள எக்ஸ்கார்டுகள், அவர்கள் விலை பற்றியும் தேடியுள்ளார்.
பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்காகவே கொலோராடோவில் அபார்ட்மெண்ட் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். ஆபீசில் வேலை இருக்கிறது வீட்டுக்கு வர நேரமாகும் என்று கூறி விட்டு அங்கு உட்கார்ந்து நூற்றுக்கணக்கில் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளார்.
சாம்பலை சாப்பிட்டேன்
அவர் இறந்த துக்கமும், ஏமாற்றிய ஆத்திரமும் சேர்ந்து மனவிரக்தியில் இருந்தேன். எனவே இறுதிச் சடங்கு முடிந்தவுடன் என்னிடம் தரப்பட்ட அவரது உடலின் சாம்பலை வீட்டு தோட்டத்தில் எனது வளர்ப்பு நாயின் மலத்துடன் கலந்தேன். அப்போதும் ஆத்திரம் அடங்காத நிலையில் அதை சாப்பிட்டேன்.
சாம்பல் பேக்கிங் பவுடரை விட சொசொரப்பாகவும், உப்பை விட தூசியாகவும் இருந்தது. தற்போது புதிய துணையை தேடிக்கொண்டாலும் உயிரிழந்த கணவரை நினைக்காத நாளில்லை, தனது உடலில் ஒரு பாகத்தை இழந்தது போல் உணர்வதாக ஜெசிகா உருக்கமாக தெரிவித்துள்ளார்.