ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரும் அவமானம் - அதிரடி வெற்றி பெற்றது வங்கதேசம் !!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. வங்கதேசத்தின் தாக்காவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணிக்கு ஷாகிப் அல் ஹசன் 36 ரன்களும், நயீம் 30 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, 131 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஆதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மிக மிக மட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.
இதன் மூலம் வெறும் 108 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது.
டி.20 உலகக்கோப்பை தொடர் நெருங்கிவிட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணியின் இந்த மோசமான தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் இந்த நிலைமையை பார்த்து கிரிக்கெட் ரசிகர்களே வேதனை தெரிவித்து வருகின்றனர், அதே போல் மறுபுறம் ஆஸ்திரேலிய அணியை
பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.