ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளுக்கு தடை விதித்தது ஆஸ்திரியா அரசு
ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசிக்கு இடைக்கால தடை விதித்தது ஆஸ்திரியா. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பின் காரணமாக நடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பூசிக்கு ஆஸ்திரியா அரசு இடைக்கால தடை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளன.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் குறைந்த வந்த கொரோனா பரவல், பிரிட்டன் உருமாறிய கொரோனாவுக்கு பின் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்கு நோக்கில் தடுப்பூசிகள் விரைவாக செலுத்தப்பட்டு வந்தன. அதன்படி பைசர், மாடர்னா மற்றும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரியாவின் தெற்கு பகுதியில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 49 வயது பெண் திடீரென்று உயிரிழந்தார்.
அதிலும் இருவர் எடுத்துக்கொண்ட தடுப்பூசியும் ஒரே பேட்ஜை சேர்ந்ததாக இருந்தது.
இதனால் தற்போது வேகமெடுத்துள்ள கொரோனா பாதிப்புக்கும் செலுத்தப்பட்டு வந்த ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் அதனால் ஆஸ்திரியா அரசு ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசிகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.