டேட்டிங் செயலி மூலம் காதலை தேடிய பெண்..பிட்காயின் மூலம் ரூ.4 கோடி மோசடி - பகீர் பின்னணி!
டேட்டிங் செயலி மூலம் இளம் ஒருவர் ரூ.4.3 கோடி இழந்த சம்பவம் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
டேட்டிங் செயலி
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் அன்னெட் ஃபோர்டு. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில், Plenty of Fish என்ற டேட்டிங் செயலி வில்லியம் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு நட்பாக மாறியுள்ளது.
இந்த சூழலில் வில்லியம் மலேசியாவில் கோலாலம்பூரில் தனது பணப்பை திருடப்பட்டதாகவும் அதில், ஏடிஎம் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததாகவும் கூறியுள்ளார். தற்பொழுது தனக்கு ரூ.2,75,000 தேவை என்று அன்னெட்டிடம் கதை கூறியுள்ளார். இதனை நம்பி அவரும் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து புது புது காரணங்களைக் கூறி, ரூ 1.6 கோடி வரை பணம் பெற்று வந்துள்ளார். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் காலத்தை கழித்தார். இந்த நிலையில் மீண்டும், அன்னெட்டிற்கு நெல்சன் என்ற மற்றொரு நபருடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பிட்காயின்
காவல்துறையில் வில்லியம் தொடர்பான வழ்க்கை விசாரிக்க $2500 கேட்கவே அன்னெட் தர மறுத்துள்ளார். அதற்கு மறுத்த நெல்சல், பணத்தை டெப்பாட்சிட் செய்யவும் பிட்காயின் ஏடிஎம் ஐ பயன்படுத்தும் படியும் வற்புறுத்தியுள்ளார். இதற்கு அன்னெட் ஒப்புக்கொண்டுள்ளார்.
பின்னர் அவருக்குத் தெரியாமல் பிட்காயின் மூலம், அவரது கணக்கிலிருந்து ரூ 1.5 கோடி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இப்படி எல்லாவற்றையும் இழந்த அன்னெட் , யாரும் இது போன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.இந்த பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.